Meet SCAPE

Toogether logo
மேற்கல்விக்கான ஆயத்தக் கல்விச் செயல்முறை (SCAPE)" மேற்கல்விக்கான ஆயத்தக் கல்வித் செயல்முறை” (SCAPE) கல்வியைக் கடந்து மாணவர்களின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டதாகும். SCAPE செயல்முறையில் நல்கப்படும் பல்வகை நடவடிக்கைகள் மாணவர்களின் நுட்பத்திறன், ஆர்வமுடையத் துறையில் அணுகல், சமூகத்தின் மீதான கடப்பாடு போன்றவற்றை ஊக்குவிக்கின்றது. சான்றோரின் உரைப்பொழிவாலும் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவதாலும், மாணவர்கள் நனிசிறந்த அனுபவத்தைப் பெறுவதோடு மேற்கல்விக்குத் தேர்வாகும் தகுதிகளில் தங்களை மேம்படுத்தி உயர்கல்விக்கும் வாழ்க்கைக்கும் தகவமைத்துக்கொள்கின்றனர். இப்படியான நெறிமுறைகொண்ட இச்செயல்முறை எதிர்காலத்தில் மாணவர்களின் பயிற்றுப் பணிக்கு உதவுவதோடு தற்போதிய நிலையில் அவர்களுக்கிடையிலான போட்டித்தன்மையையும் மேலோங்கச்செய்கிறது.

SCAPE திட்டம் குறிப்பாக பல்கலைக்கழகத்தில் நுழையத் தயாராகும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இத்திட்டத்தினூடே மாணவர்களுக்கு உரைப்பொழிவுகள் அந்தந்தத் துறைகளின் கல்வியாளர்களாலும் நிபுணர்களாலும் வழங்கப்படுகின்றன. அண்மையில் ஒன்றிய பேரரசு (UK) பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற MABECS ஏடலர்களால் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்களின் பல்கலைக்கழகப் பட்டறிவின் அடிப்படையில் மாணவர்களுக்கு நன்மையளிக்கும் செயல்திட்டங்களை SCAPE செயல்முறையில் வடிமைத்துள்ளனர்.

இணைப் பல்கலைக்கழகங்களுடன் நிகழ்த்தப்பட்ட உரைப்பொழிவுகளின் மாதிரிகள்:

✶ குழந்தை மற்றும் இளம்பருவத்தினரின் மனநலம்: நோயறிதலும் தீர்வும்

✶ புதியவகை மின்கலத்தைக் உருவாக்கும் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும்

✶ மேற்கல்விக்கு முந்திய தன்னம்பிகைத் தூண்டல்

✶ உலக நலன் பேணல்: பொதுமக்கள், அரசியல், ஊடகம் மற்றும் தொடர்பியல் நலம்

✶ வேதியியல் பொறியியல் முதல் 'குமிழில் உள்ள விண்மீன்’ வரை: புதிய பாணியிலான மருந்து தயாரிப்பு